×

செவ்வாய்தோறும் படியுங்கள் சீசனுக்கு முன்பே தர்பூசணி வருகை திருவாரூர் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா எண்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் குறித்த புகார்களை கட்டணமில்லா புதிய எண்ணில் தெரிவிக்கலாம் என கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் குறித்த புகார்களைத் தெரிவிக்க உருவாக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண். 18004252650யை நினைவில் கொள்வது கடினம் என்றும், அதற்கு சுருக்ககோடு எண் உருவாக்கலாம் என்றும் அரசு தலைமைச் செயலாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தற்போது கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் குறித்த புகார்களைத் தெரிவிக்க, பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் பொருட்டு 155214 என்ற எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த புகார்களைத் தெரிவிக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணிலும், கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள 155214 என்ற கட்டணமில்லா புதிய தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம்.  இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.


Tags : Watermelon ,Tiruvarur ,
× RELATED திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!